திராவிட இயக்கத்துக்கு பார்ப்பனரைத் தலைமைத் தாங்கச் சொல்லி இன்றைக்குத் தமிழன் எப்படி தரம் கெட்டு இழிந்து கிடக்கின்றானோ அதேபோல அன்றைக்கும் ஏமாந்து வாழ்ந்ததன் விளைவு, சமஸ்கிருத ஆண்டைத் தமிழ்ப்புத்தாண்டு என்று கொண்டாடும் மடமை.
தமிழாண்டு என்று 60 ஆண்டுகளைக் கூறுகிறார்களே அதில் ஏதாவது ஒன்று தமிழாண்டு என்றோ தமிழ்ச்சொல் என்றோ காட்ட முடியுமா? அத்தனையும் சமஸ்கிருதப் பெயர்கள் அல்லவா?
தன் இனப் பெருமையை எல்லாம் இழந்து அடுத்தவன் அடையாளங்களை ஏற்று அலைகின்ற அவலம் நீங்கும்போதுதான் தமிழன் வாழ்வான்; தமிழும் வாழும்!.
நாடார் சங்கத்திற்கு வன்னியர் தலைவர் என்றால் நாடே சிரிக்காதா? அது பைத்தியக்காரத்தனம் என்று சொல்ல மாட்டார்களா? அப்படியிருக்க சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று மட்டும் எப்படி ஏற்றுக் கொண்டாடுகின்றனர்? அப்போது மட்டும் ஏன் சிந்திப்பதில்லை? அறிவைப் பயன்படுத்துவது இல்லை?
மரபை மீறலாமா என்கின்றனர். எது மரபு? சமஸ்கிருத ஆண்டைத் தமிழாண்டு என்று சொல்லி தொல்காப்பியக் காலத் தமிழன் கொண்டாடினானா?
குளிப்பது என்பதற்கு ஸ்னானம் என்று சொல்வதிலும் சோறு என்பதற்கு சாதம் என்று சொல்வதிலும் பெருமை கொண்ட ஏமாளித் தமிழன் ஏற்றுக்கொண்டதல்லவா இந்தத் தமிழ்ப்புத்தாண்டு?
உண்மையில் தமிழ்ப்புத்தாண்டு என்பது தை முதல் நாளே யாகும். உலகிற்கு உயர்வான சிந்தனைகளைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்; உயர்வான வாழ்வியலைக் கொடுத்தவர்கள் தமிழர்கள்.
உயரிய மொழி இலக்கணத்தைக் கொடுத்தவர்கள்!
உயரிய திருக்குறளைக் கொடுத்தவர்கள்!
உயரிய கலைகளைக் கொடுத்தவர்கள்!
உயரிய பண்பாட்டைக் கொடுத்தவர்கள்!
அவ்வகையில் உலகிற்குச் சரியான ஆண்டுக் கணக்-கீட்டைக் கொடுத்தவர்களும் தமிழர்களேயாவர்!
அதுவும் அறிவியல் அடிப்படையில் இயற்கையோடு இயைந்து கணக்கிட்டுச் சொன்னவர்கள்.
ஒரு நாள் என்பது என்ன?
சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்றுவதற்கு ஆகும் காலம்.
ஒருமாதம் என்பது என்ன?
ஒரு முழு நிலவுத் தோன்றி மீண்டும் ஒரு முழு நிலவு தோன்ற ஆகும் காலம். அதனால் தான் மாதம் என்பதற்கு திங்கள் என்ற தமிழ் சொல் உள்ளது. திங்கள் என்றால் நிலவு என்று பொருள். திங்களை (நிலவை) அடிப்-படையாக வைத்துக் கணக்கிடப்படுவதால் மாதம் திங்கள் என்று அழைக்கப்பட்டது.
அதேபோல் ஆண்டு என்பது என்ன?
சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி நகர்வதாய்த் தோன்றும் நாள் முதல் (உத்ராயணம்) மீண்டும் அதே நிலை (மீண்டும் உத்ராயணம்) தொடங்கும் வரையுள்ள கால அளவு ஓர் ஆண்டு.
அதாவது சூரியன் கிழக்கில் தோன்றி மீண்டும் கிழக்கில் தோன்ற எடுத்துக் கொள்ளும் காலம் ஒருநாள்.
சூரியன் தென் கோடியில் தோன்றி மீண்டும் தென் கோடியில் தோன்றும் வரையிலான காலம் ஓராண்டு.
சுருங்கச் சொன்னால் ஓர் உத்ராயணத் தொடக்கத்திலிருந்து மீண்டும் அடுத்த உத்ராயணத் தொடக்கம் வரும் வரையுள்ள காலம் ஓர் ஆண்டு.
உத்ராயணம் என்றால் வடக்கு நோக்கல் என்று பொருள். தட்சணாயனம் என்றால் தெற்கு நோக்கல் என்று பொருள்.
சூரியன் தை மாதத் தொடக்கத்தில் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும்; பங்குனி சித்திரையில் உச்சியில் இருக்கும்; பின் ஆடியில் வடகோடியில் இருந்து தென்கோடி நோக்கும்; பின் தென்கோடிக்கு வந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரும். இவ்வாறு சூரியன் வடக்கு நோக்கி நகரத் தொடங்கியதிலிருந்து மீண்டும் வடக்கு நோக்கி நகரத் தொடங்கும் வரையிலான கால அளவு ஓர் ஆண்டு.
சூரியன் நகர்வதில்லை என்பது அறிவியல் உண்மை. ஆனால் நம் பார்வைக்கு நகர்வதாகத் தெரிவதை வைத்து அவ்வாறு கணித்தனர்.
ஆக காலக் கணக்கீடுகள் என்பவை இயற்கை நிகழ்வுகளை வைத்தே கணக்கிடப்பட்டன. இவ்வாறு முதலில் கணக்கிட்டவர்கள் தமிழர்கள்.
தை முதல் நாள் அன்றுதான் சூரியன் வடதிசை நோக்கி (உத்ராயணம் நோக்கி) நகரத் தொடங்கும். எனவே தை முதல் நாள் ஆண்டின் தொடக்க நாளாகக் கொண்-டாடப்பட்டது. ஆனால் சித்திரை முதல் நாளை ஆண்டின் முதல் நாள் என்பதற்கு எந்தக் காரணமும் அடிப்படையும் இல்லை.
தை முதல் நாளைக் கொண்டு ஆண்டுக் கணக்கீட்டைத் தமிழர்கள் தொடங்கியதை ஓட்டியே ஆங்கில ஆண்டின் கணக்கீடும் பின்பற்றப்பட்டது. தமிழாண்டின் தொடக்கத்தை (தை மாதத் தொடக்கத்தை) ஒட்டியே ஆங்கில ஆண்டின் தொடக்கம் இருப்பதை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். 12 நாள்கள் வித்தியாசம் வரும். அந்த வித்தியாசம் கூட ஆங்கில நாட்டின் இருப்பிடம் தமிழ்நாட்டின் இருப்பிடத் திலிருந்து வடமேற்கு நோக்கி 6000 மைல்களுக்கு அப்பால் இருப்பதால் ஏற்பட்டது.
ஏசு பிறப்பை வைத்து ஆங்கில ஆண்டுக் கணக்கீடு என்பது சரியன்று. காரணம், ஏசு பிறந்தது டிசம்பர் 25. மாறாக சனவரி 1ஆம் தேதியல்ல. 2006 ஆண்டுகள் என்பதுதான் ஏசு பிறப்பைக் குறிக்குமே தவிர சனவரி என்ற ஆண்டின் தொடக்கம் ஏசு பிறப்பை ஒட்டி எழுந்தது அல்ல.
எனவே, சூரியச் சுழற்சியை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுக் -கணக்கீடு என்பது உறுதியாவதோடு தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்பதும் உறுதியாகிறது.
மாறாக பிரபவ தொடங்கி அட்சய வரையிலுள்ள 60 ஆண்டுகள் எந்த அடிப்படையில் உருவானவை? ஏதாவது அடிப்படை உண்டா? கிருஷ்ணனுக்கும் நாரதருக்கும் 60 ஆண்டுகள் பிறந்தன என்ற நாற்றப் புராணத்தைத் தவிர வேறு ஆதாரம் இல்லையே!
அதுமட்டுமல்ல அந்த அறுபது ஆண்டு-களில் எந்தப் பெயரும் தமிழ்ப் பெயர் அல்ல. எல்லாம் சமஸ்கிருதப் பெயர். தமிழாண்டு என்றால் தமிழ்ப் பெயரல்லவா இருக்க-வேண்டும்?
தமிழர்களும் தமிழர் தலைவர்களும் அறிஞர்களும் தமிழ் வரலாற்றாளர்களும் இவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டிலிருந்தாவது தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாட ஆவன செய்ய வேண்டும்! தமிழக அரசும் அதை அதிகாரப்பூர்மாக அறிவிக்க வேண்டும்! தமிழாய்ந்த தலைவர் கலைஞர் காலத்திலே இது நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், ஜெயலலிதா தன் காழ்ப்புணர்ச்சியால் அதை மாற்றி சித்திரையை மீண்டும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கமாக ஆக்கி தமிழர் பெருமையைக் கெடுத்தார். தமிழறிஞர்கள் ஒன்று சேர்ந்து 1921-இல் எடுத்த இந்த முடிவை இந்த ஆண்டாவது அரசு ஏற்று அறிவிக்க வேண்டும். அதை யாரும் எதிர்க்கப்-போவதில்லை. எதிர்ப்பவன் தமிழனாக இருக்கமாட்டான்!
சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி நமக்கு வழி காட்டுகிறார்கள்; உணர்வூட்டுகிறார்கள். கலைஞர் வார்த்தை-களில் சொல்ல வேண்டுமானால் கடல் கடந்த அந்தத் தமிழுணர்வு காலங்-கடந்தாவது நமக்கு வரவேண்டுமல்லவா?
சொந்த அப்பனுக்குப் பிறந்தேன் என்பது தானே ஒருவனுக்குப் பெருமையாக இருக்க முடியும்? அடுத்தவனுக்குப் பிறந்தால் அவமானம் அல்லவா?
தமிழன் ஆண்டு சமஸ்கிருத ஆண்டாய் இருப்பது அதுபோன்ற அவமானத்தின் இழிவின் அடையாளம் அல்லவா?
உலகிற்கு வழிகாட்டிய வாழ்ந்து காட்டிய தமிழன் அடுத்தவனுடையதை இரவல் பெறவேண்டிய இழிவு ஏன்? இழிவு என்று தெரிந்தும் உண்மை என்பது விளங்கியும் இழிவைச் சுமப்பது இந்த இனத்திற்கு அழகாகுமா? எனவே தை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாகக் கொண்டாடி தலை நிமிர்ந்து தமிழனாக வாழ்வோம்!
1971 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டை நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால்தான் தமிழனுக்கு ஒரு தொடர் ஆண்டு கிடைத்துள்ளது.
அதேபோல் தமிழனுக்கு உரிய ஓர் ஆண்டுப் பிறப்பு உறுதி செய்யப்பட வேண்டும் அல்லவா?
தமிழ் ஆண்டு (திருவள்ளுவர் ஆண்டு)
பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டுகள் தொடராண்டுக்குப் பயன்படாது. 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாக இல்லை. அதற்கு வழங்கும் கதை அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாக இல்லை.
எனவே தமிழ் அறிஞர்கள், சான்-றோர்கள், புலவர்கள் 1921-ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்க் கடல் மறைமலை அடிகள் தலைமையில் கூடி ஆராய்ந்து, திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது, அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது, திருவள்ளுவர் காலம் கி.மு. 31 தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று முடிவு செய்து, 18.1.1935ஆம் நாள் திருவள்ளுவர் திருநாள் கழகத்தினர் நடத்திய திருவிழாவில் தலைமை தாங்கிய தமிழ்க்கடல் மறைமலை அடிகளார் உறுதி செய்து அறிவித்தார். திருவள்ளுவர் ஆண்டு கணக்கிட கிறித்து ஆண்டுடன் 31 கூட்டல் வேண்டும் என்றுகூறி திருவள்ளுவர் ஆண்டைத் தொடங்கி வைத்தார்.
எனவே, தை முதல் நாளே
SOURCE FROM : http://www.unmaionline.com/3775-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D.html -- THANKYOU
ConversionConversion EmoticonEmoticon