MANITHAN TV | AEPS , MINI ATM , MONEY TRANSFER , AMAZON STORE

விரைவில் தங்கம், வெள்ளி போன்று பெட்ரோல், டீசல் விலையும் தினமும் மாறும்..இதற்கும் தயாராகிவிடுங்கள்..!

இந்தியாவில் தினமும் எரிபொருட்களின் விலையை இரவில் மாற்றம் செய்யும் திட்டம் விரைவில் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படித் தினமும் பெட்ரோல், டிசல் விலையை மாற்றி அமைப்பதன் மூலம் தினமும் விலை உயரும் குறையும் என்று எல்லாம் கூற முடியாது , ஆனால் பைசா கணக்கில் தினமும் மாற்றம் இருக்கும் என்றும் இதனால் வாடிக்கையாளர்கள் ஆச்சபடத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். இதனால் உலக அளவில் எப்படி எண்ணெய் சந்தை இருக்கின்றதோ அதே போன்று நாமும் கட்டணம் செலுத்த வேண்டி வரும். எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைச் சர்வதேச விலைக்கு ஏற்றவாறு தினமும் மாற்றி அமைக்கலாம் என்ற யோசிக்கின்றன என்ற அன்மையில் எக்னாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

அரசுக்கு உள்ள சிக்கல் தீரும் இப்போது அரசு அவ்வப்போது பெட்ரோல், டீசல் விலையை மொத்தமாக ஏற்றும் போது அரசியல் கட்சிகள் நடத்தும் போராட்ட்டங்கள் உள்ளிட்ட சிக்கல்கள் இனி இருக்காது. விலை உயர்வது பெரிதாக தெரியாது.

தங்கம் ,வெள்ளி விலை போன்று இந்தியாவில் தங்கம், வெள்ளி போன்றவற்றுக்கு எப்படித் தினமும் விலை முடிவு செய்யப்படுகின்றதோ அதே போன்று தான் பெட்ரோல், டீசல் மீதான விலை ஏற்ற, இறக்கங்கள் இந்தத் திட்டம் அமலுக்கு வரும்போது இருக்கும் எனப்படுகின்றது.


நீண்ட கால முயற்சி பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நீண்ட காலமாகத் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைக்கும் முறை பற்றி விவாதித்து வருவதாகவும், அதற்கான தொழில்நுட்ப வசதிகள் இப்போது தான் கிடைத்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

முதலில் விலையை மாற்ற இருந்த முறைகள் முதலில் பெட்ரோல், டீசல் விலையை நிறுவனங்கள் தொலைப்பேசி மூலமாகத் தான் பெற்று வந்தனர். இப்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவிகளால் விலை மாற்றப்படுகின்றன. இதனால் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றவாறு விலையை மாற்றுவது எளிதாக உள்ளது.
உலகத்தரத்திற்கு மாற்றும் முயற்சி தினமும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைப்பது இந்திய எரிபொருட்கள் சந்தையில் உலகத்தரத்திற்கு மாற்றும் முயற்சி என்றும் கூறப்படுகின்றது.

நமக்குப் பயன் உண்டா? இது வாடிக்கையாளர்கள், டீலர்கள் என அனைவருக்கும் நல்ல பயனளிக்கும் என்றும் எண்ணெய் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குத் தெரிவித்தார்.

முன்பு அளித்த அனுமதி சந்தைக்கு ஏற்றார் போன்று இந்தியாவில் பெட்ரோல் விலையை மாற்றி அமைக்க 2014-ம் ஆண்டும், டீசல் விலையை மாற்றி அமைக்க 2010-ம் ஆண்டும் அரசு பெட்ரோல் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது

தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு இந்திய எண்ணெய் சந்தையில் பங்களித்து வரும் தனியார் துறை நிறுவனங்களான ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல் நிறுவனங்களும் இதில் பங்களித்தால் நன்மை அளிக்கும் என்று அரசு கருதுகின்றது.

பொதுத் துறை நிறுவனங்கள் வசம் உள்ள சந்தை அளவு இந்தியன் ஆயில், பிபிசிஎல் மற்றும் எச்பிசிஎல் நிறுவனங்களிடம் இந்தியாவின் 95 சதவீத எண்ணெய் சந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous
Next Post »