MANITHAN TV | AEPS , MINI ATM , MONEY TRANSFER , AMAZON STORE

ஜியோ பயனர்களே "இந்த 7 மேட்டர்களில்" உஷாராகி கொள்ளுங்கள்.!

இன்றோடு காலக்கெடு முடிவடையும் நிலையில் நீங்கள் ஒரு ரிலையன்ஸ் ஜியோ பயனராக இருப்பின் நீங்கள் கவனிக்க வேண்டிய, உஷாராகிக் கொள்ள வேண்டிய 7 விடயங்கள் உள்ளது.!

ரிலையன்ஸ் ஜியோ சேவையின் ப்ரைம் மெம்பராக இணைந்துக்கொள்ளும் காலக்கெடு இன்றோடு (ஈர்ப்பால் 15, 2017) முடிகிறது, அதாவது இன்றே கடைசி நாள். கடந்த மாத இறுதியில், ஜியோ நிறுவனம் ஏப்ரல் 15 வகையி அதன் பிரதம திட்டத்தின் காலக்கெடுவை நீட்டித்து அறிவித்தது. இன்றோடு காலக்கெடு முடிவடையும் நிலையில் நீங்கள் ஒரு ரிலையன்ஸ் ஜியோ பயனராக இருப்பின் நீங்கள் கவனிக்க வேண்டிய, உஷாராகிக் கொள்ள வேண்டிய 7 விடயங்கள் உள்ளது.! முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம்.! 

ஜியோ வழங்கிய இலவச சேவைகள் எல்லாமே முடிவுக்கு வருகிறது, அகற்றப்பட உள்ளன. நாளையிலிருந்து, அதாவது ஏப்ரல் 16 முதல் நிறுவனம் அதன் புதிய கட்டண திட்டத்தை அமைக்க வேண்டும். பயனர்கள் தாம் எடுத்துள்ள திட்டத்தின்படி கட்டணம் செலுத்த வேண்டும், மற்றொரு இலவச சேவை வரும் என்று கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம்.

'பிரத்தியேக ப்ரைம்' சலுகை.!

 வேண்டுமென்றால் இந்த வாரத்திற்கு முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ மூன்று மாதங்கள் நீடிக்கும் 84 ஜிபி வழங்கும் ரூ.408/- (ரூ.309 + ரூ.99/-) திட்டத்தையே அல்லது தினசரி 2ஜிபி அளவிலான 4ஜி டேட்டா வழங்கும் ரூ.509/-திட்டத்தையே ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த 'பிரத்தியேக ப்ரைம்' சலுகை கூட இன்று முடிவடைகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த ரீசார்ஜ் செய்யும் வரை

 ஜியோ அதன் சம்மர் சர்ப்ரைஸ் ஆபரை திரும்ப பெற்றுக்கொள்ளும் முன்பே நீங்கள் ரூ.303/- ரீசார்ஜே செய்திருந்தால் கவலையே வேண்டாம், நீங்கள் எந்த தண் தணா தண் ஆபர் ரீசார்ஜும் செய்ய வேண்டாம். அடுத்த ரீசார்ஜ் செய்யும் வரை உங்களுக்கு உறுதி அளிக்கப்பட சலுகைகளில் எதுவும் மாற்றங்கள் இருக்காது.

செல்லுபடி

 ப்ரைம் மெம்பர் அல்லாத உறுப்பினர்களுக்காக ரிலையன்ஸ் புதிய கட்டண திட்டத்தின் கீழ் ரூ.408/- திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 1ஜிபி மற்றும் ரூ.609/- திட்டத்தின் கீழ் நாள் ஒன்றிற்கு 2ஜிபி தரவு பெறலாம். இந்த இரண்டு திட்டங்களுமே 84 நாட்கள் செல்லுபடியாகும்.

உள்நாட்டு அழைப்புகள் 

செப்டம்பர் 2016-ல் ரிலையன்ஸ் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது போன்றே ஜியோ குரல் (எந்த நெட்வொர்க்குடனுனான உள்நாட்டு) அழைப்புகள் இலவசமாக இருக்கும் நன்மை தொடரும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

ரோமிங் கட்டணம் 

அதாவது நாட்டின் எந்த நெட்வொர்க்குடனும் ரிலையன்ஸ் நெட்வொர்க்கின் கீழ் இலவசமாக குரல் அழைப்புகளை நீங்கள் நிகழ்த்தலாம் என்பதின் கீழ் ஜியோ பயனர்கள் இந்தியா முழுவதும் குரல் அழைப்புகளை எந்தவிதமான ரோமிங் கட்டணமும் இன்றி நிகழ்த்தலாம் என்று அர்த்தமாகும்.

வரம்பற்ற டேட்டாவை வழங்கவில்லை

 ஜியோ நிறுவனத்தின் அனைத்து புதிய கட்டண திட்டங்களும் தினசரி தரவு பயன்பாடு கட்டுப்பாடு கொண்டது, அதாவது வரம்பற்ற டேட்டாவை வழங்கவில்லை என்று அர்த்தம். அதாவது ரூ.408 திட்டம் 1ஜிபி தினசர எல்லையும், ரூ.608/- திட்டம் 2ஜிபி தினசரி எல்லையும் கொண்டுள்ளது. ரூ.999 அல்லது அதற்கு மேலான மதிப்பு கொண்ட திட்டங்களுக்கு மட்டுமே கிட்டத்தட்ட தினசரி எல்லை வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous
Next Post »